டாப் 18 தேர்தல் களம்: அதிமுக நிர்வாகிகள் நீக்கம் முதல் பிரதமர் மோடி தாராபுரம் வருகை வரை!

டாப் 18 தேர்தல் களம்: அதிமுக நிர்வாகிகள் நீக்கம் முதல் பிரதமர் மோடி தாராபுரம் வருகை வரை!
டாப் 18 தேர்தல் களம்: அதிமுக நிர்வாகிகள் நீக்கம் முதல் பிரதமர் மோடி தாராபுரம் வருகை வரை!

* 'சட்டம் - ஒழுங்கு சந்தி சிரிக்கும் அதிமுக ஆட்சியில், பெண்கள் பாதுகாப்பாக இருப்பதாகச் சொல்வதற்கு நா கூசவில்லையா?' என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது தேர்தல் பிரப்புரையின் போது ஆளும் கட்சியை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளார். விரிவாக வாசிக்க > “பெண்கள் பாதுகாப்பாக இருப்பதாகச் சொல்வதற்கு நா கூசவில்லையா?" - மு.க.ஸ்டாலின் 

* பிரதமர் நரேந்திர மோடியின் தேர்தல் பரப்புரைக்கான தமிழக வருகையையொட்டி, ட்விட்டரில் அவரை ஆதரித்தும் எதிர்த்தும் ஹேஷ்டேக் யுத்தமே நடந்து வருகிறது. விரிவாக வாசிக்க > பிரதமர் மோடியின் தமிழக வருகையால் ட்விட்டரில் வெடித்த ஹேஷ்டேக் யுத்தம்!

* தேமுதிக பொருளாளரும் விருத்தாசலம் வேட்பாளருமான பிரேமலதா விஜயகாந்த்தை ஆதரித்து வாக்கு சேகரித்த அவரது மகன் விஜய பிரபாகரன், தனது தாய்க்கு லேடி கேப்டன் என்று பட்டம் சூட்டினார். விரிவாக வாசிக்க > தாய் பிரேமலதாவுக்கு ’லேடி கேப்டன்’ என்று பட்டம் சூட்டிய விஜய பிரபாகரன்!

* தமிழக தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், சாதனைகள் மற்றும் திட்டங்களுக்கு பதில் அனுதாபம் மூலம் வாக்குகளை பெறும் பிரச்சார யுக்திகளை தமிழக அரசியல் கட்சிகள் கையாள தொடங்கியுள்ளன. விரிவாக வாசிக்க > தடம் மாறுகிறதா பரப்புரை களம்? - அனுதாபம் மூலம் வாக்குகளை பெறும் பிரச்சார யுக்திகள்! 

* கபடி களத்துக்கும் வருவேன், கஜா புயலுக்கும் வருவேன் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அடுக்கு மொழியில் உருக்கமாக பேசி பரப்புரை செய்து வருகிறார். விரிவாக வாசிக்க > 'கபடி களத்துக்கும் வருவேன், கஜா புயலுக்கும் வருவேன்' - விஜயபாஸ்கரின் ரைமிங் பேச்சு

* தமிழக தேர்தல் களத்தில் அதிக அளவு வேட்பாளர்கள் உள்ள நிலையில் பலருக்கு காமெடியான சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. சின்னத்தின் பெயர்களை கேட்டாலே வாக்காளர்கள் சிரிப்பதாக வேதனையடைகின்றனர் பல வேட்பாளர்கள். விரிவாக வாசிக்க > ‘காய்கறி, பழங்கள், ரொட்டி, ஸ்டம்ப்’ சிரிப்பூட்டும் சின்னங்கள் - வேதனையில் சுயேச்சைகள்!

* திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தனித்தொகுதியில், பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் போட்டியிடுவதால் களம் கடுமையான சவால்களுடன் காட்சியளிக்கிறது. இதற்காக கட்சிகள் வியூகங்களை வகுத்து வாக்கு சேகரித்து வருகின்றன. விரிவாக வாசிக்க > ‘எல்.முருகன், கயல்விழி, கலாராணி, ரஞ்சிதா...’ - தாராபுரத்தை தட்டிப்பறிக்கப் போவது யார்?

* "குடியுரிமைச் சட்டம், வேளாண் சட்டம் என பாஜக கொண்டு வந்த மக்கள் விரோத செயல்கள் அனைத்துக்கும் அதிமுக ஆதரித்து, தமிழகத்துக்கு மட்டுமின்றி இந்தியாவுக்கே அதிமுக துரோகம் செய்துள்ளது" என்றார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாரம் யெச்சூரி. விரிவாக வாசிக்க > தமிழகம் மட்டுமின்றி இந்தியாவுக்கே துரோகம் இழைத்தது அதிமுக: சீதாராம் யெச்சூரி சாடல்

* "அரசியலுக்கு தாமதமாக வந்ததற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்" என்றார் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன். விரிவாக வாசிக்க > "அரசியலுக்கு தாமதமாக வந்ததற்கு மன்னிப்பு கேட்கிறேன்!" - கமல்ஹாசன்

* "தற்போது பாஜகவாக மாறிவிட்டது அதிமுக. மதவாத சக்திகளுக்கு தமிழகத்தில் இடமில்லை. இது பெரியாரின் மண்" என்றார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன். விரிவாக வாசிக்க > "மதவாத சக்திகளுக்கு தமிழகத்தில் இடமில்லை. இது பெரியாரின் மண்!" - திருமாவளவன்

* அதிமுக தொண்டர்களுக்கு இன்று தொடங்கி வரும் 4-ம் தேதி வரை சில முக்கியப் பணிகள் இருக்கின்றன என்றும் அவற்றை சிறப்பாக செய்ய வேண்டும் எனவும் ராஜேந்திர பாலாஜி தெரிவித்திருக்கிறார். விரிவாக வாசிக்க > 4-ம் தேதி வரை சில பணிகளை சிறப்பாக செய்ய வேண்டும்" - ராஜேந்திர பாலாஜி அறிவுறுத்தல்

* அதிமுக வேட்பாளர்களுக்கு போட்டியாக களமிறங்கிய முன்னாள் எம்.பி ஏழுமலை உள்பட 6 பேரை கட்சியிலிருந்து நீக்குவதாக ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் அறிவித்துள்ளனர். விரிவாக வாசிக்க > அதிகாரப்பூர்வ வேட்பாளர்களுக்கு போட்டியாக களமிறங்கிய 7 பேர் அதிமுகவிலிருந்து நீக்கம்!

* வன்னியர்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீடு என்பது தற்காலிகமானதே என்று துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். விரிவாக வாசிக்க > 'வன்னியர்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீடு என்பது தற்காலிகமானதே' - ஓபிஎஸ் பேச்சு

* தாயில்லா பிள்ளைகளை கைவிட்டுவிடாதீர்கள் என்றும் ஜெயலலிதா இல்லாமல் நாங்கள் படும் பாடு கொஞ்சநஞ்சமில்லை  என்றும் அமைச்சர் ஆர்பி.உதயகுமார் பரப்புரையில் உருக்கமாக பேசினார். விரிவாக வாசிக்க > "தாயில்லா பிள்ளைகள் நாங்கள்; கைவிட்டு விடாதீர்கள்" - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உருக்கம் 

* அதிமுகவிற்கு வாக்களிக்க வேண்டாம் எனக்கூறி சீர்மரபினர் நல சங்கத்தைச் சேர்ந்த வேட்பாளர் செருப்பு மாலை அணிந்து தெருக்களில் பிரச்சாரம் செய்து வருகிறார். விரிவாக வாசிக்க > "அதிமுகவுக்கு ஓட்டு போடாதீங்க" : செருப்பு மாலையோடு வாக்கு சேகரிக்கும் கம்பம் வேட்பாளர்

* தாமரைக்கு வாக்களித்தால் மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் வீடு தேடிவரும் என நெல்லையில் பாஜக மாநில செயற்குழு உறுப்பினரும் நடிகையுமான நமீதா பரப்புரையில் தெரிவித்தார். விரிவாக வாசிக்க > "தாமரைக்கு வாக்களித்தால் மத்திய, மாநில அரசின் திட்டங்கள் வீடுதேடி வரும்" - நமீதா பேச்சு

* தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தலையொட்டி திருப்பூர் மவட்டம் தாராபுரத்தில் நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் பேசுவதற்காக தாராபுரம் வந்தார் பிரதமர் மோடி. விரிவாக வாசிக்க > அதிமுக, பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை - தாராபுரம் வந்தார் பிரதமர் மோடி!

* 'மத்தியில் தேசிய கட்சிகளை இணைத்து ஒற்றுமையுடன் செயல்பட்டால், மோடி தலைமையிலான அரசை வீழ்த்த முடியும்' என ராகுல் காந்தி உடனான தேர்தல் பிரசாரத்தின்போது திமுக தலைவர் ஸ்டாலின் பேசியுள்ளார். இதற்கு சாத்தியம் இருக்கிறதா? விரிவாக வாசிக்க > 2024-ல் மோடி அரசை வீழ்த்த ராகுலிடம் ஸ்டாலின் பகிர்ந்த வியூகம்... எந்த அளவுக்கு சாத்தியம்?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com