டாப் 7 தேர்தல் செய்திகள்: அண்ணாமலையின் வேட்புமனு ஏற்பு முதல் கட்சி சின்னத்தில் கேக் வரை!

டாப் 7 தேர்தல் செய்திகள்: அண்ணாமலையின் வேட்புமனு ஏற்பு முதல் கட்சி சின்னத்தில் கேக் வரை!
டாப் 7 தேர்தல் செய்திகள்: அண்ணாமலையின் வேட்புமனு ஏற்பு முதல் கட்சி சின்னத்தில் கேக் வரை!

நத்தம் சட்டப்பேரவைத்தொகுதி திமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் இரு தரப்பினருக்கிடையே ரகளை வாக்குவாதம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.  விரிவாக வாசிக்க திமுகவில் சீட் கிடைக்காத விரக்தி: வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் தள்ளுமுள்ளு.

* அரவக்குறிச்சி சட்டப்பேரவை தொகுதியின் பாஜக வேட்பாளர் அண்ணாமலையின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டு பின் ஏற்கப்பட்டுள்ளது. விரிவாக வாசிக்க பாஜக வேட்பாளர் அண்ணாமலையின் வேட்புமனு நிறுத்திவைப்பிற்கு பின் ஏற்பு.

* புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே நடைபெற்ற அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்ற பெண்களை சரக்கு வாகனத்தில் ஏற்றிச் செல்லும்போது சரக்கு வாகனம் எதிர்பாராதவிதமாக கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில், 17 பேர் காயமடைந்தனர். விரிவாக வாசிக்க அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகளை ஏற்றிச் சென்ற சரக்கு வாகனம் கவிழ்ந்து 17 பேர் காயம்.

* மேலூர் அருகே வாக்கு கேட்டு வந்த சட்டப்பேரவை உறுப்பினரை தடுத்து நிறுத்திய பொதுமக்கள், அடிப்படை வசதிகள் எதுவும் செய்துதரவில்லை என புகார் தெரிவித்தனர். விரிவாக வாசிக்க மதுரை: ஓட்டு கேட்டு வந்த அதிமுக எம்எல்ஏ-வை தடுத்து நிறுத்திய பொதுமக்கள்!

* பூந்தமல்லி பாமக வேட்பாளர் துண்டு பிரசுரம் இல்லாததால் மாம்பழத்தை கொடுத்து வாக்கு சேகரித்தார். விரிவாக வாசிக்க துண்டுபிரசுரம் இல்லாததால் மாம்பழத்தை கொடுத்து வாக்கு கேட்ட பாமக வேட்பாளர்.

* இன்னும் 30 நிமிடங்கள் ஒதுக்கி தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தால் மக்கள் வாங்கிய மளிகை கடன், கைமாத்து கடனை கூட முதலமைச்சர் ரத்து செய்திருப்பார். விரிவாக வாசிக்க மக்கள் வாங்கிய மளிகைக் கடன் கைமாத்து கடனையும் முதல்வர் ரத்து செய்திருப்பார் - ப.சிதம்பரம்.

* வேலூரில் மக்களை கவர கட்சி சின்னம், கொடிகள் பொறிக்கப்பட்ட கேக்கை பேக்கரி ஒன்று தயாரித்து வருகிறது. விரிவாக வாசிக்க வேலூர்: கலர் கலராக கட்சிக் கொடிகளுடன் விற்பனைக்கு வந்துள்ள கேக்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com