டாப் 5 அரசியல் களம்: அதிமுக-கம்யூனிஸ்ட் மோதல் முதல் 'எனக்கு கல்யாணம்' காமெடி வரை

டாப் 5 அரசியல் களம்: அதிமுக-கம்யூனிஸ்ட் மோதல் முதல் 'எனக்கு கல்யாணம்' காமெடி வரை
டாப் 5 அரசியல் களம்: அதிமுக-கம்யூனிஸ்ட் மோதல் முதல் 'எனக்கு கல்யாணம்' காமெடி வரை

தமிழக தேர்தல் களத்தில் இன்று நடந்த ஐந்து சுவாரஸ்யமான சம்பவங்கள் குறித்து இங்கு பார்க்கலாம்

தமிழகத்தில் தமிழர்களுக்கு வேலை பறிபோய் கொண்டிருக்கிறது. அதற்கு நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்? என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை பார்த்து இளைஞர் எழுப்பிய கேள்வியால் பரப்புரைக் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. விரிவாக வாசிக்க தமிழகத்தில் தமிழர்களுக்கு வேலை பறிபோய் கொண்டிருக்கிறது: கமலிடம் கேள்வியெழுப்பிய இளைஞர்

* வாக்கு சேகரிப்பின்போது ஆரத்தி எடுத்த பெண்களுக்கு  நாமக்கல் திமுக எம்பி பணம் வழங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. விரிவாக வாசிக்க ஆரத்தி எடுத்த பெண்களுக்கு பணம் கொடுத்த திமுக எம்பி: சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ

* திருத்துறைப்பூண்டி அருகே முன்விரோதம் காரணமாக அதிமுகவைச் சேர்ந்தவர்கள் மீது கம்யூனிஸ்ட் கட்சியினர் தாக்குதல் நடத்திய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து திருத்துறைப்பூண்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விரிவாக வாசிக்க திருத்துறைப்பூண்டி: அதிமுக - கம்யூனிஸ்ட் மோதல்; ஆறுதல் கூறிய வேட்பாளர்!

* ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்ட பரப்புரைக் கூட்டத்தில் அவர் பேசிக்கொண்டிருந்தபோதே பொதுமக்கள் கலைந்து சென்றதால் கட்சியினர் அதிர்ச்சி அடைந்தனர். விரிவாக வாசிக்க ஓபிஎஸ் பேசும்போது கலைந்து சென்ற பொதுமக்கள் - அதிர்ச்சியடைந்த அதிமுகவினர்!

* நாளைக்கு எனக்கு திருமணம் மறக்காமல் வந்து விடுங்கள் என திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி ருசிகரமாக பேசி கரூரில் வாக்கு சேகரித்தார். விரிவாக வாசிக்க 'எனக்கு கல்யாணம் மறக்காம வந்துருங்க!' - காமெடியாக பேசி வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com