டாப் 5 தேர்தல் செய்திகள்: அரசியல் கட்சிகளின் கூட்டணி முதல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு வரை

டாப் 5 தேர்தல் செய்திகள்: அரசியல் கட்சிகளின் கூட்டணி முதல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு வரை
டாப் 5 தேர்தல் செய்திகள்: அரசியல் கட்சிகளின் கூட்டணி முதல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு வரை

சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அமமுக வெளியிட்டுள்ளது. சுமார் 15 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். விரிவாக வாசிக்க > அமமுகவின் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி 187 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறது. அதில் திமுகவை சேர்ந்த உறுப்பினர்கள் 174 பேரும், கூட்டணி கட்சியினர் 13 பேரும் உதய சூரியனில் களம் காண்கின்றனர். விரிவாக வாசிக்க > 187 தொகுதிகளில் உதயசூரியன் சின்னம்: திமுகவின் வியூகம்

உழவை மீட்போம் உலகைக் காப்போம் என்ற நோக்கத்தை முன்வைத்து நாம் தமிழர் கட்சி தேர்தலை எதிர்கொள்வதாகக் கூறினார் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். ஆயிரம், ஐந்தாயிரம் கொடுப்பதாக வாக்குறுதியை அளிக்க தாம் தயாராக இல்லை என்றும், மக்கள் 50,000 ரூபாய் அளவுக்கு சம்பாதித்துக் கொள்ள அரசு வேலை தரப்படுமென உறுதியளிப்பதாக சீமான் வாக்குறுதி அளித்தார். விரிவாக வாசிக்க > “ஆயிரம், ஐந்தாயிரம் கொடுப்பதாக வாக்குறுதி அளிக்க மாட்டேன்; ஆனால்..” - சீமான்

தங்கள் கூட்டணிக்கு யார் வந்தாலும் அரவணைப்போம் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மக்கள் நீதி மய்யத்தின் கூட்டணியில் உள்ள சமத்துவ மக்கள் கட்சி மற்றும் இந்திய ஜனநாயக கட்சிக்கு தலா 40 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், அதற்கான ஒப்பந்தத்தில் கையொப்பமிடும் நிகழ்வு சென்னை ஆழ்வார்பேட்டையில் நடைபெற்றது. அதில் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், இந்திய ஜனநாயக கட்சி தலைவர் ரவி பச்சமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விரிவாக வாசிக்க > கூட்டணிக்கு யார் வந்தாலும் அரவணைப்போம்: கமல்ஹாசன்

திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது. திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் விவரங்களும் இன்று வெளியாகிறது. சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில், காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, ஐயூஎம்எல், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. அனைத்துக் கட்சிகளின் தலைவர்களுடன் தொடர்ந்து நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளில், தொகுதிப் பங்கீடுகள் நிறைவு பெற்றன. விரிவாக வாசிக்க > திமுக வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியாகிறது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com