M. Karunanidhi
M. KarunanidhiX

தேர்தல் களம் | தமிழகத்தில் அதிக வாக்குகள் பெற்ற டாப் 5 வேட்பாளர்கள்!

தமிழக சட்டமன்றத் தேர்தல் வரலாற்றில், அதிக சதவீதம் வாக்குகளை பெற்று இமாலய வெற்றிகண்ட 5 வேட்பாளர்களின் பட்டியலை இப்போது காண்போம்.
Published on
Summary

தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிக வாக்குச் சதவீதம் பெற்ற 5 முன்னணி வேட்பாளர்கள் பட்டியலில், 1977ஆம் ஆண்டு கன்னியாகுமரி கிள்ளியூரில் ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்ட பொ.விஜயராகவன் 79.2% வாக்குகள் பெற்று முதலிடத்தில் உள்ளார். 1996ஆம் ஆண்டு சேப்பாக்கத்தில் திமுக தலைவர் மு.கருணாநிதி 77.05% வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார்.

தமிழகத்தில், அதிக வாக்கு சதவிகிதத்தில் வெற்றி பெற்றவர்களில் முதலிடத்தில் இருப்பவர், 1977ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் தொகுதியில் ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்ட பொ.விஜயராகவன் ஆவார். இவர் 34,327 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரது வாக்குச் சதவீதம் 79.00 ஆகும். இதனைத் தொடர்ந்து, 1996ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், சென்னை சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட திமுக தலைவர் மு.கருணாநிதி 46,097. இவரது வாக்குச் சதவீதம் 77.05.

கலைஞர் கருணாநிதி
கலைஞர் கருணாநிதிPt web

1991இல் புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ச.குழந்தைவேலு 91,350 ஓட்டுகள் பெற்று 76.52 சதவீதத்தில் வாகை சூடினார். 1991ஆம் ஆண்டு திண்டுக்கல் வேடசந்தூர் தொகுதியில் போட்டியிட்ட காந்தி ராஜன் 94,937 வாக்குகள் பெற்று 76.47 சதவீதத்தில் வெற்றி பெற்றார். நாமக்கல் சேந்தமங்கலம் தொகுதியில் போட்டியிட்ட சின்னசாமி 72,877 வாக்குகள் பெற்று 76.19 சதவீதத்தில் வெற்றி பெற்றார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com