
தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை சேகர் காலனி குடியிருப்பு பகுதியில் உள்ள குப்பையில் தமிழ்நாடு அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வழங்குவதற்காக விநியோகித்த அயர்ன் அன்ட் போலிக் ஆசிட் சிரப் ஐ.பி என்ற 200க்கும் மேற்பட்ட டானிக் பாட்டில்கள் குப்பையில் கொட்டப்பட்டுள்ளன. இந்த டானிக் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் ரத்த சோகை உள்ள கர்ப்பிணிகளுக்கு வழங்கப்படுவதாகும்.
ஒரு மருத்துவமனையில் குறிப்பிட்ட மருந்து அதிகமாக இருப்பு இருந்தால், ‘அதை அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க வேண்டும். அல்லது தமிழ்நாடு மெடிக்கல் சப்ளை மருந்து கிடங்குக்கு தகவல் சொல்ல வேண்டும். காலாவதியாகும் வரை மருந்தை வைத்திருக்கக் கூடாது’ என்றெல்லாம் விதிகள் உள்ளன. அப்படியிருக்க இந்த 200 பாட்டில்களை குப்பையில் கொட்டி இருப்பதற்கு காரணம் யார்? வீசிச்சென்றது யார் என்று விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.