Tomorrow TVK Vijay’s swearing in Congress support and DMK alliance split
Vijayweb

நாளை பதவியேற்கும் விஜய்? ஆதரவு தரும் காங்.? உடையும் திமுக கூட்டணி!

விஜய், நாளை தமிழக முதலமைச்சராக பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Published on

தவெக ஆட்சியமைக்க பெரும்பான்மைக்கு இன்னும் 11 இடங்கள் தேவை என்கிற நிலையில், அக்கட்சி ஆட்சியமைப்பதற்கு விஜய் ஆதரவு கோரியுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் கருத்துக்கணிப்புகளை தவிடுபொடியாக்கி 108 தொகுதிகளில் வெற்றிபெற்று தனிப்பெரும் கட்சியாக உருவாகியுள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகம் சார்பில், ஆளுநருக்கு புதிய கடிதம் அனுப்பட்டுள்ளது. ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கக் கோரி தவெக சார்பில் ஏற்கனவே கடிதம் எழுதியிருந்த நிலையில், அதுகுறித்த முழுமையான விவரங்கள் ஆளுநர் தரப்பில் இருந்து கேட்கப்பட்டிருந்தது. இதனையடுத்து இன்று ஆளுநரை சந்திக்க நேரம் கேட்டு கடிதம் எழுதியுள்ள விஜய், அதில், 7ஆம் தேதி அதாவது நாளை பதவியேற்பு விழா வைக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

விஜய்
விஜய்Pt web

இதனால் விஜய், நாளை தமிழக முதலமைச்சராக பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் மேடை அமைக்கும் பணிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் தவெக தரப்பில் அமைச்சரவை பட்டியல் குறித்த ஆலோசனைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, தவெக சார்பில் வெற்றி பெற்ற 72 உறுப்பினர்கள் மாமல்லபுரத்தில் தங்கவைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tomorrow TVK Vijay’s swearing in Congress support and DMK alliance split
தமிழக அரசியலில் தொடங்கிய 'விஜய் யுகம்'| அதிர்ந்த திரை to அதிரப்போகும் கோட்டை.!

அதேநேரத்தில், தவெக ஆட்சியமைக்க பெரும்பான்மைக்கு இன்னும் 11 இடங்கள் தேவை என்கிற நிலையில், காங்கிரஸ் (5), விசிக (2), கம்யூனிஸ்டுகள் (4), தேமுதிகவின் (1) ஆதரவுடன் ஆட்சியில் அமரலாம். அல்லது இரண்டாவது வாய்ப்பாக, காங்கிரஸ் (5), பாமக (4), தேமுதிக (1), அமமுக (1) ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைக்கலாம். மூன்றாவது வாய்ப்பாக அதிமுக பார்க்கப்படுகிறது. இதுவே நீண்டக்கால பலனை அளிக்கும் என அரசியல் நோக்கர்கள் கணிக்கின்றனர்.

வேணுகோபால்
வேணுகோபால்

இத்தகைய சூழலில், தவெக ஆட்சியமைப்பதற்கு விஜய் ஆதரவு கோரியுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார். அதேநேரத்தில், பாஜக அங்கம் வகிக்கும் அரசு அமைந்துவிடக் கூடாது என்றும் கருத்து தெரிவித்துள்ளார். மேலும், விஜய்யின் தவெகவிற்கு ஆதரவு கொடுப்பது பற்றி இன்று தமிழக காங்கிரஸ் தலைமை முடிவெடிக்க உள்ளது. இதனால், திமுக - காங்கிரஸ் கூட்டணி உடையுமா என்ற சூழலும் உருவாகியுள்ளது.

Tomorrow TVK Vijay’s swearing in Congress support and DMK alliance split
விஜய் எனும் சூறாவளி.. தாக்குப் பிடித்து நின்ற இபிஎஸ்.. வெற்றிபெற்றது எப்படி?
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com