நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்
Published on

மழைக் காரணமாக நாகை மாவட்டத்திலுள்ள பள்ளிகளுக்கும் வேறு சில மாவட்ட பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருவதால், ஆங்காங்கே மழைநீர் பெருக்கெடுத்து ஓடும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பல இடங்களில் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டும், பொதுமக்கள் வீடுகளில் தங்கமுடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. இதனால் இன்று சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் மழையின் எதிரொலியாக நாகை மாவட்டம் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் கடலூர் மாவட்டத்தில் உள்ள குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில் தாலுகாக்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. அத்துடன் விருத்தாசலம், திட்டக்குடி, வேப்பூரைத் தவிர்த்து பிற அனைத்து தாலுகாக்களிலும் உள்ள பள்ளிகளுக்கும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனுடன் தமிழகத்துடன் இணைந்த நாளை ஒட்டி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com