நாளை வழக்கம்போல் பெட்ரோல் பங்குகள் இயங்கும் - ஆனால் இந்த 7 மாவட்டங்களில்...

நாளை வழக்கம்போல் பெட்ரோல் பங்குகள் இயங்கும் - ஆனால் இந்த 7 மாவட்டங்களில்...

நாளை வழக்கம்போல் பெட்ரோல் பங்குகள் இயங்கும் - ஆனால் இந்த 7 மாவட்டங்களில்...
Published on

வங்க கடலில் உருவாகியுள்ள ‘நிவர்’புயல் காரணமாக நாளை அரசு பொதுவிடுமுறை அளித்துள்ளது. இந்நிலையில், பெட்ரோல் பங்குகள் நாளை வழக்கம்போல் இயங்கும் என பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது “அத்தியாவசிய சேவையினை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பெட்ரோல் டீசல் விற்பனை நிலையங்களும் நாளை இயங்கும். அதே சமயத்தில் நாளை புயலினை எதிர்கொள்ளும் மாவட்டங்களான கடலூர் ,விழுப்புரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 7 மாவட்டங்களில் புயல் கரையை கடக்கும் போது பெட்ரோல் டீசல் விற்பனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும்.

புயல் கரையை கடந்த பிறகு தக்க பாதுகாப்புடன் மீண்டும் விற்பனை தொடங்கப்படும். மற்ற மாவட்டங்களில் வழக்கம்போல விற்பனை நடைபெறும்.” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com