\
நாளை நடைபெறவிருந்த மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்

நாளை நடைபெறவிருந்த மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்

நாளை நடைபெறவிருந்த மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்
Published on

தமிழகத்தில் நாளை மருத்துவர்கள், செவிலியர்கள் கறுப்புப் பட்டை அணிந்து நடத்த இருந்த போராட்டம் திரும்பப் பெறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தடுப்புப்பணியில் ஈடுபட்டிருந்த செவிலியர் பிரிசில்லா உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது குடும்பத்திற்கு ரூபாய் 50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு மருத்துவர்கள், செவிலியர்கள் சங்கம் முன்வைத்திருந்தது.

இதுதொடர்பாக நாளை கறுப்புப் பட்டை அணிந்து போராட்டம் நடத்தப்போவதாகத் தெரிவித்திருந்தது. இந்நிலையில் தமிழக அரசு நடத்திய பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்டுள்ளது. இதனால் நாளை நடைபெறவிருந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com