\
நாளை ஆட்டோ, வேன், கால்டாக்சி ஓடாது..!

நாளை ஆட்டோ, வேன், கால்டாக்சி ஓடாது..!

நாளை ஆட்டோ, வேன், கால்டாக்சி ஓடாது..!
Published on

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதத்தில் நாளை ஆட்டோ, வேன், கால்டாக்சி போன்ற வாகனங்கள் ஓடாது என தமிழக சாலைப் போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த வலியுறுத்தி மாணவர்கள் கடந்த 3 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஜல்லிக்கட்டு தடையை மத்திய, மாநில அரசுகள் நீக்கி மீண்டும் ஜல்லிக்கட்டை நடத்த வலியுறுத்தியும், பீட்டா அமைப்பை தடை செய்யக் கோரியும் நாளை (வெள்ளிக்கிழமை) தமிழகம் முழுவதும் ஆட்டோ, வேன், கால்டாக்சி போன்ற 10 லட்சம் வாகனங்கள் இயங்காது என தமிழக சாலைப் போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனம் அறிவித்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com