"தக்காளி பதுக்கலை தடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்" அமைச்சர் பன்னீர்செல்வம்

"தக்காளி பதுக்கலை தடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்" அமைச்சர் பன்னீர்செல்வம்
"தக்காளி பதுக்கலை தடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்" அமைச்சர் பன்னீர்செல்வம்

தக்காளி விலை உயர்ந்துள்ளதால் பதுக்கலை தடுக்க கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

தமிழகத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. குறிப்பாக தக்காளி ஒரு கிலோ 150 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

இந்த நிலையில் விலையை கட்டுப்படுத்துவற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருவதாகவும், ஆந்திர உள்பட மாநிலங்களிலும், வரத்து வரக்கூடிய மாவட்டங்களிலும் மழை பெய்து வருவதால் விலை உயர்வதாக அமைச்சர் தெரிவித்தார்.

இந்த சூழலில் பதுக்கலில் ஈடுபட்டு மேலும் விலை உயர்வதை தடுக்க கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும், ஆய்வுகளை மேற்கொள்ளவும் வேளாண் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

உழவர் சந்தை திட்டத்தை மேம்படுத்தும் பணிகள் விரைவாக நடைபெற்று வருவதாகவும், சந்தைக்கு அருகே உள்ள பகுதியிலே காய்கறி உற்பத்தியை அதிகரிக்கவும், உற்பத்தியான காய்கறிகளை சந்தைக்கு கொண்டு வர வாகன ஏற்பாடு செய்யப்பட உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com