
கோவையில் 100 க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் எந்த விசாரணையும் இன்றி பறிமுதல் செய்யப்படுவதாக ஆட்டோ ஓட்டுநர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியில் 200 க்கும் மேற்பட்டவர்கள், ஆட்டோ ஓட்டுகின்றனர். கடந்த 2 மாதங்களாக டோல்ஃப்ரீயின் மூலம் புகார் கொடுத்தால் எந்த விசாரணையும் இன்றி ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்படுவது வழக்கமாகி உள்ளதாக ஆட்டோ ஓட்டுநர்கள் குற்றம்சாட்டுகின்றனர். ஒரு ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டால் அது திரும்பவும் ஓட 30 நாட்களுக்கு மேல் ஆவதாக வேதனையுடன் கூறியுள்ளனர். மேலும் டோல்ஃப்ரீ அமைப்பின் மூலம் முன்விரோதம் காரணமாகவும் புகார்கள் அளிக்கப்படுவதால் அதிகாரிகள் உரிய விசாரணைக்கு பின்னரே ஆட்டோக்களை பறிமுதல் செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் ஓட்டுநர்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.