HEADLINES|பள்ளிகளுக்கு விடுமுறை - மண் சரிவில் சிக்கிய குழந்தைகள் உட்பட 7 பேர்!
விழுப்புரம், கடலூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், தருமபுரி, சேலம், ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை. புதுச்சேரியிலும் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவிப்பு.
சென்னை பல்கலைக்கழக பருவத்தேர்வுகள் ஒத்திவைப்பு.. அண்ணாமலை, திருவள்ளுவர், சேலம் பெரியார் பல்கலை. தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு.
ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக மையம் கொண்ட ஃபெஞ்சல் புயல் மேலும் வலுவிழந்தது. மேற்கு, வடமேற்கு நோக்கி நகரக் கூடும் என வானிலை மையம் கணிப்பு.
திருவண்ணாமலையில் ஏற்பட்ட மண் சரிவில் 7 பேர் சிக்கினர். மோப்ப நாய்கள் உதவியுடன் மீட்பு பணியில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் தீவிரம்.
மண் சரிவில் சிக்கிய வீடுகளில் இருந்த 7 பேரை தொடர்புகொள்ள முடியவில்லை எனவும், மீட்புப் பணிகள் முழு வீச்சில் நடைபெறுவதாக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தகவல்.
திருவண்ணாமலை அருகே கொண்டம் பகுதியில் சாலையில் பெருக்கெடுத்த வெள்ளம். வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் மக்கள் அவதி.
விழுப்புரத்தில் இரு குழந்தைகளை பக்கெட்டில் வைத்து பத்திரமாக மீட்ட புதிய தலைமுறை செய்தியாளர் காமராஜ். செய்தியாளர்கள் என்பவர்கள் சமூகத்தின் அங்கம் என்பதை நிரூபித்துள்ளதாக அன்புமணி ராமதாஸ் பாராட்டு.
தியாகதுருகம் அருகே தரைப்பாலத்தை மூழ்கடித்த வெள்ளம். புதிய தலைமுறை செய்தி எதிரொலியாக தடுப்புகள் அமைத்த காவல் துறை.
சேலம் மாவட்டத்தில் பொழிந்து வரும் தொடர் கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு. பலத்த காற்றினால் மரங்கள் முறிந்து சாலையின் குறுக்கே விழுந்ததால் பாதிப்பு..
தொடர் மழை பெய்து வரும் நிலையில் ஏற்காடு சுற்றுலா செல்வதை தவிர்க்க வேண்டும் என சேலம் ஆட்சியர் அறிவுறுத்தல்.
தஞ்சை அருகே வீட்டின் பழைமையான வீட்டை புதுப்பிக்கும் பணியின்போது மேற்கூரை இடிந்து விழுந்ததில் 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு.
தஞ்சாவூர் அருகே சூறைக்காற்றில் சிக்கி ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழைகள் முறிந்து சேதம். அரசு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தல்.
ஃபெஞ்சல் புயலின் தாக்கத்தால் திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் 3 நாள்களாக பொழியும் கனமழையால், ஆம்பூர், வாணியம்பாடி சுற்றுப்பகுதிகளில் சாலைகளில் பெருக்கெடுக்கும் வெள்ளம்.
எதிர்க்கட்சி தலைவரின் குற்றச்சாட்டை மதிப்பதும் இல்லை, கவலைப்படுவதும் இல்லை என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேட்டி. இதற்கு, மக்கள் பிரச்னைகளை எழுப்பினால் முதலமைச்சர் பதில் சொல்வது இல்லை என்று எடப்பாடி பழனிசாமி பதிலடி.
ஒரு வெற்றிகரமான நடிகர் அரசியலுக்கு வந்துவிட்டார்.. தோல்வியடைந்த நடிகர் துணை முதல்வராகிவிட்டார். என கோவை நிகழ்ச்சியில் விஜயையும், உதயநிதியையும் விமர்சித்த அண்ணாமலை.
புதுச்சேரி உள்துறை அமைச்சரை முற்றுகையிட்ட சொந்த தொகுதி மக்கள். மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்ய வலியுறுத்தல்.
திருச்செந்தூர் கடல் பகுதியில் இரண்டு கல்வெட்டுக்கள் கண்டெடுப்பு. 100 ஆண்டுகளுக்கு உட்பட்டது எனத் தகவல்.
உளுந்தூர்பேட்டை அருகே தற்காலிக தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதில், 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குப் போக்குவரத்து துண்டிப்பு.
சென்னை மதுரவாயலில் சாலையில் திடீரென ஏற்பட்ட ராட்சத பள்ளம், 15 அடி அகலம், 10 அடி ஆழத்தில் இருப்பதால், போக்குவரத்து பாதிப்பு.
சத்தியமங்கலம் அருகே மலைகிராமத்தில் சுற்றித்திரியும் 30க்கும் அதிகமான காட்டு யானைகள்.
கர்நாடகாவில் இருந்து விரட்டப்பட்ட யானைகளால் கிராம மக்கள் அச்சம்.
டிஜிட்டல் மோசடிகளை தடுத்தல் மற்றும் துறைமுக பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டும் என வருடாந்திர போலீஸ் உயர் அதிகாரிகள் மாநாட்டில் பிரதமர் மோடி வலியுறுத்தல்.
மஹாராஷ்டிராவில் பாஜக தலைமையிலான கூட்டணி அரசு வரும் 5 ஆம் தேதி பதவியேற்பு. புதிய முதல்வர் யார் என்பது இன்று வெளியாகும் என எதிர்பார்ப்பு.
இந்தியாவில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் கவலையளிக்கிறது என்று, சுயசரிதை நூலில் ஜெர்மனி முன்னாள் பிரதமர் ஏஞ்சலா மெர்கல் குற்றச்சாட்டு.
ஜார்ஜியா அரசின் ஐரோப்பிய ஒன்றிய ஆதரவுக்கு எதிர்ப்பு. நான்காவது நாளாக இரவு நேரத்தில் நடைபெற்ற பிரமாண்ட போராட்டம்.
காஸாவில் இஸ்ரேல் தாக்குதல். கடந்த 24 மணி நேரத்தில் 47 பேர் உயிரிழப்பு.
இஸ்கான் அமைப்பைச் சேர்ந்த மேலும் இரண்டு துறவிகள் வங்கதேசத்தில் கைது. துறவிகள் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு இந்தியாவில் கடும் எதிர்ப்பு.
ஆஸ்திரேலியா ப்ரைம் மினிஸ்டர் லெவன் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டம். இந்திய அணி வெற்றி.