முதல்வராகும் உத்தவ் தாக்கரே முதல் கோத்தபய ராஜபக்ச இந்திய வருகை வரை ! #TopNews
மகாராஷ்ட்ரா முதலமைச்சராக இன்று மாலை பதவியேற்கிறார் உத்தவ் தாக்கரே.பிரச்னைகளுக்கு மூல காரணமான அஜித் பவார் மீண்டும் தேசியவாத காங்கிரசில் ஐக்கியம்.
பதவியேற்பு விழாவுக்கு வருமாறு பிரதமர் மோடிக்கு தொலைபேசி மூலமாக உத்தவ் தாக்கரே அழைப்பு.சோனியா காந்தி, மன்மோகன் சிங்கை நேரில் சந்தித்து அழைத்தார் ஆதித்ய தாக்கரே.
உள்ளாட்சித் தேர்தலை நடத்த தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் மும்முரம். அனைத்துக்கட்சித் தலைவர்களுடன் தேர்தல் ஆணையர் இன்று ஆலோசனை.
ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய இரண்டு மாவட்டங்கள் இன்று உதயம். நிர்வாகப் பணிகளை முறைப்படி தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி.
சென்னையிலும் புறநகர்ப் பகுதிகளிலும் இரவில் இடி மின்னலுடன் கனமழை.தமிழ்நாட்டில் மழை நீடிக்க வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல்.
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச இன்று இந்தியா வருகை. எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்த மதிமுக திட்டம்.