இன்றைய முக்கியச் செய்திகள்!  

இன்றைய முக்கியச் செய்திகள்!  

இன்றைய முக்கியச் செய்திகள்!  
Published on

தமிழகத்தின் 33‌-ஆவது மாவட்டமாக தென்காசி இன்று உதயமாகிறது. நிர்வாகப் பணிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.

2021ஆம் ஆண்டு தேர்தலில் தமிழக மக்கள் அதிசயம் நிகழ்த்துவார்கள் என ரஜினிகாந்த் கூறியதற்கு, அதிமுக ஆட்சியே மீண்டும் மலரும் என்பதையே ‌ரஜினி கூறுவதாக முதலமைச்சர் பழனிசாமி பதிலடி அளித்துள்ளார்.

முடிவுக்கு வரும் நிலையில் மகாராஷ்டிரா அரசியல் சிக்கல். எண்ணிக்கைக்கு ஏற்ப அமைச்சர்கள் பதவி‌ என முடிவானதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரசவத்தின்போது கர்ப்பிணி வயிற்றுக்குள் ஊசியை வைத்துத் தைத்த அதிர்ச்சி சம்பவம். ராமநாதபுரம் மாவட்ட ஆரம்ப சுகாதார மைய செவிலியர்கள் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

குழந்தைகளை கடத்தி வைத்த புகாரில் நித்தியானந்தா மீது கிரிமினல் வழக்குப்பதிவு. தலைமறைவாகியுள்ள நித்தியானந்தா வெளிநாட்டில் பதுங்கியிருப்பதாக குஜராத் போலீஸ் தகவல் அளித்துள்ளது.

தமிழகத்தில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

உணவு பொருட்களுக்கான தேசிய தர நிர்ணய கட்டுப்பாட்டில் கோயில்கள், பள்ளிகள். பிரசாதம் முதல் அன்னதானம் வரை பரிசோதிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு. தோனிக்கு அணியில் இடமில்லை, ஷிவம் துபே-வுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணி முதன்முறையாக விளையாடும் பகலிரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொல்கத்தாவில் இன்று தொடக்கம். வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா-மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியை தொடங்கி வைக்கிறார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com