குடியுரிமை மசோதா நிறைவேற்றம் முதல் கார்த்திகை தீபம் வரை #TopNews

குடியுரிமை மசோதா நிறைவேற்றம் முதல் கார்த்திகை தீபம் வரை #TopNews
குடியுரிமை மசோதா நிறைவேற்றம் முதல் கார்த்திகை தீபம் வரை #TopNews

நீண்ட விவாதத்திற்கு பிறகு மக்களவையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நள்ளிரவில் நிறைவேற்றப்பட்டது. மசோதாவுக்கு ஆதரவாக 311 எம்பிக்களும் எதிராக 80 பேரும் வாக்களித்தனர்.

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா சிறுபான்மையினருக்கு எதிரானது அல்ல என்று மசோதா மீதான விவாதத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பதில் அளித்தார்.

மக்களவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேறியது குறித்து பிரதமர் மோடி மகிழ்ச்சி.

தமிழகத்திற்கு எகிப்தில் இருந்து வந்த வெங்காயம் சந்தைகளில் விற்பனை. சில்லறை விற்பனையாளர்கள் அதிகப்பட்சம் 2 டன் வெங்காயத்தை மட்டுமே இருப்பு வைக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திருவண்ணாமலையில் பரணி தீபம் இன்று காலை ஏற்றப்பட்டது.மாலையில் ஏற்றப்படும் மகாதீபத்திற்காக ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் முறையீடு. மேயர் உள்ளிட்ட பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் நடத்துவதை எதிர்த்து, உயர்நீதிமன்றத்தில் திருமாவளவன் மனு தொடர்ந்துள்ளார்.

நித்யானந்தா எங்கே இருக்கிறார் என்பதை வரும் 12-ஆம் தேதிக்குள் கண்டறியவேண்டும் என்று கர்நாடகா உயர்நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

கர்நாடகாவில் ஆட்சியை தக்க வைத்தார் முதலமைச்சர் எடியூரப்பா. பெரும்பான்மைக்கு 6 இடங்கள் தேவைப்பட்ட நிலையில் 12 தொகுதிகளில் வெற்றி.

டெல்லியில் ஜே.என்.யூ. பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலீசார் தடியடி. அனுமதியில்லாமல் குடியரசுத் தலைவர் மாளிகை நோக்கி பேரணி சென்றதால் விரட்டியடிப்பு.

அடுத்த ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக்கில் பங்கேற்க ரஷ்யாவுக்கு தடை.ஊக்க மருந்து சர்ச்சையில் சிக்கியதால், ஊக்க மருந்து தடுப்பு முகமை அதிரடி.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com