இன்றைய முக்கியச் செய்திகள் சில..

இன்றைய முக்கியச் செய்திகள் சில..

இன்றைய முக்கியச் செய்திகள் சில..
Published on


ஜி7 மாநாட்டுக்கு இடையே பிரிட்டன் பிரதமர் மற்றும் ஐ.நா பொதுச்செயலாளரை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் 5 நாள் சிபிஐ காவல் முடிந்து இன்று ப.சிதம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்.

தமிழகத்தில் எந்த விதத்திலும் தீவிரவாதம் தலைதூக்க முடியாது என அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

காஞ்சிபுரம் கங்கையம்மன் கோயில் குளத்தில் கிடந்த மர்மப் பொருள் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அசத்தல் வெற்றி பெற்றுள்ளது.

உலகச் சாம்பியன்ஷிப் பேட்மின்டனில் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று பி.வி.சிந்து புதிய சாதனை படைத்துள்ளார்.

ஆஷஸ் டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியில் பென் ஸ்டோக்ஸ் அசத்தல் சதத்தால் இங்கிலாந்து அணி த்ரில் வெற்றி பெற்றது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com