இன்றைய முக்கியச் செய்திகள் சில...

இன்றைய முக்கியச் செய்திகள் சில...

இன்றைய முக்கியச் செய்திகள் சில...
Published on

வேலூரில் அனல் பறக்க நடைபெற்று வந்த தேர்தல் பரப்புரை ஓய்ந்தது. நாளை நடைபெறும் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரம்.

ஈரான் சிறையில் உள்ள ஒரு தமிழர் உள்ளிட்ட 18 இந்தியர்களை மீட்க நடவடிக்கை. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எழுதிய கடிதத்திற்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பதில்.

ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து இல்லை என, அம்மாநில ஆளுநர் விளக்கம்.

காஷ்மீரில் கல்லூரி விடுதிகளில் இருந்து மாணவர்கள் உடனடியாக வெளியேற உத்தரவு.

மும்பையிலும், அதன் புறநகர் பகுதிகளிலும் தொடரும் கனமழை.அடுத்த 24 மணி நேரத்துக்கு நீடிக்கும் என்பதால், ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது.

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் வணிக வளாகத்தில் துப்பாக்கிச்சூடு. இதில் 20 பேர் உயிரிழப்பு. 40க்கும் மேற்பட்டோர் காயம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com