தலைப்புச் செய்திகள் | பிரதமர் தமிழ்நாடு வருகை முதல் அன்னபூரணிக்கு வருத்தம் தெரிவித்த நயன்தாரா வரை!
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்:
மூன்று நாள் பயணமாக இன்று தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி. ஆகவே சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு மற்றும் 22 ஆயிரம் போலீசார் குவிப்பு.
சென்னையில் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைக்கிறார் பிரதமர்.
“ஆளுநர்கள் மலிவான, தரம்தாழ்ந்த அரசியல் செய்யும் அவலத்தை இந்தியா இப்போதுதான் காண்கிறது” - முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்
7 ஆண்டுகளுக்கு பிறகு கோடநாடு எஸ்டேட் சென்றார் சசிகலா. அதிமுகவை ஒன்றிணைக்கும் பணிகள் நல்லபடியாக நிறைவடையும் என பேட்டி.
புதுச்சேரியில் காங்கிரஸ் - திமுக கூட்டணியில் சலசலப்பு.
போக்குவரத்து தொழிற்சங்கத்தினரின் 6 அம்ச கோரிக்கைகள் நிறைவேறுமா? தொழிலாளர் நலத்துறை சார்பில் இன்று முத்தரப்பு பேச்சுவார்த்தை.
விருத்தாசலம் அருகே தொடர் மழையால் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் பாதிப்பு. ஆய்வு செய்து அரசு இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை.
உலகின் மிகப்பெரிய அம்பேத்கர் சிலை இன்று திறப்பு. 206 அடி உயர சிலையை ஆந்திராவில் திறந்து வைக்கிறார் முதலமைச்சர் ஜெகன்மோகன்.
டெல்லியில் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து. 4 பெண்கள் உட்பட 6 பேர் உயிரிழந்த சோகம்.
ஜெய் ஸ்ரீராம் என்ற தொடங்கி, ‘அன்னபூரணி திரைப்படம் உணர்வுகளை புண்படுத்தி இருந்தால் வருத்தம் தெரிவித்து கொள்கிறேன்’ - எனக்குறிப்பிட்டு 3 மொழிகளில் அறிக்கை வெளியிட்ட நடிகை நயன்தாரா.