வெள்ளத்தில் மிதக்கும் தலைநகரம் - மதுவிலக்கு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளும் மசோதா!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, வெள்ளத்தில் மிதக்கும் தலைநகரம் முதல் மதுவிலக்கு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளும் மசோதா இன்று தாக்கல்வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்Facebook
  • நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.மேலும், நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புமாறு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்திக்கும் வலியுறுத்தியுள்ளார்.

  • கள்ளச்சாராய உயிரிழப்புகளை தடுக்க, தண்டனை கடுமையாக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு. மேலும், தமிழ்நாடு மதுவிலக்கு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளும் மசோதா சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்படவுள்ளது.

  • போதைப்பொருள் புழக்கம் அதிகரித்து வருவது அச்சத்தை ஏற்படுத்துவதாக விஜய் வேதனை தெரிவித்துள்ளார். மேலும், தமிழ்நாட்டுக்கு நல்ல தலைவர்கள் தேவை என்றும் பேசியுள்ளார்.

  • 2026 சட்டமன்றத் தேர்தலில் விஜய் உடன் கூட்டணியா? என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், புதிய தலைமுறைக்கு சுவாரஸ்ய பதிலளித்துள்ளார்.

  • 88 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கொட்டிய கனமழையால் தத்தளிக்கும் தலைநகரம் டெல்லி. இந்நிலையில், எய்ம்ஸ் மருத்துவமனை கட்டடத்திற்குள் கசிந்த மழைநீரால் நோயாளிகள் அவதியடைந்துள்ளனர்.

  • டெல்லி நியூ உஸ்மான்பூரில் மழைநீர் நிரம்பிய பள்ளத்தில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும், நொய்டாவில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மூன்று சிறுவர்கள் உயிரிழந்த பரிதாபம் அரங்கேறியுள்ளது.

  • கோவை மருதமலை வனப்பகுதியில் தாயை பிரிந்த குட்டி யானை உயிரிழப்பு. தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்த சோகம்.

  • பீகாரில் கட்டுமானப் பணியில் இருந்த மற்றுமொரு பாலம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து விசாரிக்க உயர்மட்ட விசாரணைக்கு மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

  • டிரம்ப் உடனான நேரடி விவாதத்தால் எழுந்த தன் மீதான விமர்சனங்களை கண்டு பின்வாங்கப் போவதில்லை என ஜோ பைடன் திட்டவட்டம்.

  • இருபது ஓவர் உலகக்கோப்பையை வெல்லப்போவது யார்?.இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் இன்று பலப்பரீட்சை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com