கும்பகோண பள்ளித் தீ விபத்தின் நினைவு தினம் இன்று
நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய கும்பகோணம் பள்ளித் தீ விபத்தின் 15-ம் ஆண்டு நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
காசிராமன் தெருவில் இயங்கிவந்த ஸ்ரீ கிருஷ்ணா தனியார் பள்ளியில் கடந்த 2004-ம் ஆண்டு ஜூலை 16-ம் தேதி தீவிபத்து ஏற்பட்டது. இதில் தீயில் சிக்கி 94 குழந்தைகள் உடல்கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்த குழந்தைகளின் நினைவாக பாலக்கரை காவிரி ஆற்றுப்பாலம் அருகே பூங்காவில் நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டது.
ஒவ்வோர் ஆண்டும் தீவிபத்து நினைவுநாளின் போது நினைவு சின்னத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்படுவதோடு, குழந்தைகளின் நினைவாக ஊர்வலம் நடத்தப்படுகிறது. மேலும் குழந்தைகள் புதைக்கப்பட்ட இடுகாட்டில், ஒவ்வொரு ஆண்டும் தங்களை விட்டு பிரிந்த செல்வங்களுக்கு பிடித்தமான உணவு வகைகளை படைத்து தங்கள் அன்பையும் ஆதங்கத்தையும் பெற்றோர் வெளிப்படுத்தி வருகின்றனர்.