தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர் படிவங்களை சமர்ப்பிக்க இன்று கடைசி நாள்!
தமிழ்நாட்டில் எஸ்ஐஆர் படிவங்களை சமர்ப்பிக்க இன்று கடைசி நாளாகும். வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மும்முரமாக பணியாற்றி, 6 கோடியே 38 ஆயிரம் படிவங்களை பதிவேற்றியுள்ளனர். புதிய வாக்காளர்கள் சேர்க்கைக்கான பணி தொடங்கப்பட்டு, டிசம்பர் 16ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.
தமிழ்நாட்டில் எஸ்ஐஆர் படிவங்களைசமர்ப்பிக்க இன்று கடைசி நாளாகும். வாக்காளர் பட்டியல் சிறப்புதிருத்த பணி நவம்பர் 4ஆம் தேதிதொடங்கப்பட்டது. விநியோகிக்கப்பட்ட 6 கோடியே 40 லட்சம் படிவங்களில், 6 கோடியே 38ஆயிரம் படிவங்கள் பதிவேற்றப்பட்டுள்ளன.
கணக்கீட்டு படிவங்கள் வழங்க இன்று கடைசி நாள் என்பதால்,வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் தங்கள் பணிகளை மும்முரமாக செய்துவருகின்றனர்.
இதையடுத்து முந்தைய முகவரியில் இல்லாதவர்கள், வாக்காளர் பட்டியலில் ஒன்றுக்கு மேற்பட்ட பதிவுகள் உள்ளவர்கள், உயிரிழந்தவர்கள் ஆகியோர் வாக்காளர்பட்டியலில் இருந்து பெயர்கள் நீக்கப்பட்டு வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 16ஆம் தேதி வெளியிடப்படும். இதனிடையே புதியவாக்காளர்கள் சேர்க்கைக்கான, படிவம்- 6 வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

