பழையன கழிதலும்.. புதியன புகுதலும்.. - போகிப் பண்டிகையில் மக்கள் உற்சாகம்

பழையன கழிதலும்.. புதியன புகுதலும்.. - போகிப் பண்டிகையில் மக்கள் உற்சாகம்
பழையன கழிதலும்.. புதியன புகுதலும்.. - போகிப் பண்டிகையில் மக்கள் உற்சாகம்

தமிழகம் முழுவதும் போகிப் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.


தமிழ் ஆண்டின் மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இது பழையன கழித்து, புதியன புகுந்திடும் நாளாகும். போகி அன்று வீட்டில் தேங்கியிருக்கும் தேவையற்ற பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டு, வீடு சுத்தமாக்கப்படும். வீடு மட்டுமல்ல; மனதில் இருக்கும் தீய எண்ணங்களும், தவறான எண்ணங்களும் நீக்கப்பட வேண்டும் என்பது இதற்குள் ஒளிந்துள்ள தத்துவமாகும்.

பொங்கலுக்காக வீட்டை சுத்தம் செய்யும்போது, வீட்டிலிருக்கும் தேவையற்ற பொருட்களை தீயிட்டுக் கொளுத்துவது காலம் காலமாக இருந்து வரும் பழக்கம். இதையொட்டி,சென்னையில் காலை முதலே போகிப் பண்டிகை விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. பயனற்ற பொருட்களை எரித்தும், மேளம் அடித்தும் போகியை வரவேற்றனர். சென்னையில் மக்கள் பழைய பொருட்கள், பாய், பழைய துணிகள் போன்றவைகளை எரித்தும்,சிறுவர்கள் மேளம் அடித்தும் போகி பண்டிகையை கொண்டாடினர். இதனால் பல பகுதிகளில் மார்கழி பனியை விரட்டும் அளவுக்கு புகை மூட்டம் காணப்படுகிறது.

இதனிடையே நெகிழிப் பொருட்களை தீயிட்டு கொளுத்தி சுற்றுச்சூலுக்கு மாசு ஏற்படுத்த வேண்டாம் என மாசுகட்டுப்பாட்டு வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com