இன்றைய முக்கியச் செய்திகள்....

இன்றைய முக்கியச் செய்திகள்....

இன்றைய முக்கியச் செய்திகள்....
Published on

சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கர்நாடக‌ அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இது தொடர்பாக கர்நாடகா முதலமைச்சர் அலுவலகத்தின் ட்விட்டர் பக்கத்தில், கர்நாடக மற்றும் தமிழ்நாட்டிற்கு நீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையத்திடம் அதிகாரிகள் அனுமதி கோரியுள்ளதாகவும், அவ்வாறு ஆணையம் மூலம் தண்ணீரை பெற கர்நாடக அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியதாகவும் குமாரசாமி குறிப்பிட்டுள்ளார். 

பதவி விலகிய மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏக்களைச் சந்தித்துப் பேச கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி இன்று மும்பைக்குச் செல்லவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி பதவி விலக வேண்டும் என அம்மாநில பாரதிய ஜனதா தலைவர் எடியூரப்பா வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக இன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் அவர் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு பாதிப்பு ஏற்படுமென்றால், 10% இட ஒதுக்கீட்டை நிராகரிப்போம் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்‌வம் தெரிவித்துள்ளார்.

இரவோடு இரவாக கரூர் இரண்டாவது குற்றவியல் நீதிமன்ற நடுவர் விஜய் கார்த்திக் முன்பு ஆஜர்படுத்தப்பட்ட சமூக செயற்பாட்டாளர் முகிலன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 

இந்தியா - நியூசிலாந்து மோதிய அரை இறுதி ஆட்டம் மழையால் நேற்று நிறுத்தப்பட்டது. ஐசிசி விதிப்படி விட்ட இடத்திலிருந்து இன்று மீண்டும் ஆட்டம் நடைபெறும்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com