உள்ளாட்சி தேர்தல் வேட்புமனு முதல்... வெஸ்ட் இண்டீஸ் வெற்றி வரை..

உள்ளாட்சி தேர்தல் வேட்புமனு முதல்... வெஸ்ட் இண்டீஸ் வெற்றி வரை..

உள்ளாட்சி தேர்தல் வேட்புமனு முதல்... வெஸ்ட் இண்டீஸ் வெற்றி வரை..
Published on

தமிழகத்தில் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது. தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள‌ ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் இரண்டு கட்டங்களாக வரும் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்கி வரும் 16-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை டிசம்பர் 17 ஆம் தேதி நடைபெறுகிறது. 

தேர்தலைச் சந்திக்க திமுகவும், அதன் தலைவர் ஸ்டாலினும் அச்சப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். கோவை விமானநிலையத்தில் செய்தியாளர்களைச் சந்துத்த அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் தேர்தலைச் சந்திக்க திமுகவிற்கு தெம்பு உள்ளதா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மீண்டும் நீதிமன்றத்தை நாடுவது என திமுகவின் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், இன்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உள்ளாட்சித் தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என ரஜினி மக்கள் மன்றம் அறிவித்துள்ள நிலையில், தேர்தலில் போட்டியிடவில்லை என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் இடைத்தேர்தல் நடைபெற்ற 15 தொகுதிகளில் இன்று வாக்குகள் எண்ணப்படுகின்றன. 6 தொகுதிகளில் கட்டாயம் வென்றாக வேண்டிய நிலையில், எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு பிழைக்குமா? அல்லது கவிழுமா? என்பது இன்று பிற்பகலில் தெரியவரும்.

இந்தியாவுக்கு எதிரான‌ இரண்டாவது டி20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடர் சமநிலை அடைந்துள்ளது. டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 170 ரன்கள் சேர்த்தது. மேற்கிந்த‌ய தீவுகள் அணி 18.3 ஓவர்களில் 2 விக்கெட்களை மட்டுமே இழந்து 173 சேர்த்து வெற்றி பெற்றது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை சமன் செய்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com