பிரதமர் மோடி - சீன அதிபர் ஸி ஜின்பிங் இடையேயான வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பு மாமல்லபுரத்தில் நடைபெற்றது. சீன அதிபரை பிரதமர் மோடி தமிழரின் பாரம்பரிய வேட்டி, சட்டை, மேல் துண்டு அணிந்து கைகுலுக்கியபடி உற்சாகமாக வரவேற்றார்.
மாமல்லபுரம் கடற்கரை கோயிலில் நடந்த கலாசார நடன நிகழ்ச்சிகளை பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஸி ஜின்பிங்கும் வெகுவாக கண்டு ரசித்தனர். நிகழ்ச்சியின் முடிவில் நடனக் கலைஞர்களுடன் குழு புகைப்படம் எடுத்து அசத்தினர்.
பிரதமர் மோடியும் சீன அதிபர் ஜின்பிங்கும் சுமார் 2 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் உள்ளிட்டவை குறித்து இருவரும் ஆலோசித்ததாக வெளியுறவுத்துறை செயலாளர் விஜய் கோகலே தெரிவித்தார்.
அமைதிக்கான நோபல் பரிசு எத்தியோப்பிய பிரதமர் அபய் அகமது அலிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 2019ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கு 223 பேரும், 78 அமைப்புகளும், 301 பரிந்துரை கடிதங்களும் வந்திருந்த நிலையில், எத்தியோப்பிய பிரதமர் அபய் அகமதுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அமைதி மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்காக இந்த விருது அபய் அகமதுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 601 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. கேப்டன் விராட் கோலி இரட்டை சதம் அடித்து அசத்தினார். மேலும், டெஸ்ட் கிரிக்கெட்டில், அதிக இரட்டை சதங்கள் விளாசிய இந்திய வீரர் என்ற பெருமையை கேப்டன் விராட் கோலி பெற்றுள்ளார்.