today heavy rains likely in 6 districts
மழைpt web

‘மஞ்சள்’ எச்சரிக்கை.. இன்று 6 மாவட்டங்களில் கனமழை!

தென் மாவட்டங்களில் சனிக்கிழமை (பிப். 21) பலத்த மழை பெய்யக்கூடும் என்பதால், அந்த மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Published on

தென் மாவட்டங்களில் இன்று (பிப். 21) பலத்த மழை பெய்யக்கூடும் என்பதால், அந்த மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு வங்கக் கடலில் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், பிப். 25 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகா், தேனி மாவட்டங்களில் இன்று (பிப். 21) ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும். திண்டுக்கல், மதுரை, தேனி மாவட்டங்களில் நாளை ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

today heavy rains likely in 6 districts
மழைஎக்ஸ் தளம்

இந்த இரு நாள்களிலும் மேற்குறிப்பிட்ட மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, புறநகா்ப் பகுதிகளில், வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். வட தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை லேசான பனிமூட்டம் காணப்படும். ஓரிரு இடங்களில் பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். பிப். 23 முதல் 26 வரை தென் தமிழகம் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com