\
இன்றைய முக்கியச் செய்திகள்!  

இன்றைய முக்கியச் செய்திகள்!  

இன்றைய முக்கியச் செய்திகள்!  
Published on


சீன அதிபர் ஸி ஜின்பிங் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று சென்னை வருகிறார்.

பிரதமர், சீன அதிபர் வருகையையொட்டி, சென்னை முதல் மாமல்லபுரம் வரை உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சீன அதிபர் சென்னை வரும் நிலையில், காவல்துறையினர்  வாகன அணிவகுப்பு ஒத்திகையை நடத்தினர்.

சீன அதிபர் வருகையால் சென்னை சுத்தமானது போல உலகத் தலைவர்கள் வந்தால் தமிழகம் சுத்தமாகும் என்று சட்டவிரோத பேனர் வழக்கில் உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகாவுக்கு திட்ட அனுமதி தரக்கூடாது என்று மத்திய அமைச்சர்கள் இருவருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

2018, 2019ஆம் ஆண்டுகளுக்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசு நேற்று அறிவிக்கப்பட்டது.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்டிலும் சதம் அடித்தார் மயங்க் அகர்வால். முதல் நாளில் இந்திய அணி 3 விக்கெட்டுக்கு 273 ரன்கள் குவித்தது.

அமெரிக்காவின் எச்சரிக்கையையும் மீறி சிரியாவில் துருக்கி ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com