ப. சிதம்பரத்திற்கு மேலும் ஒருநாள் சிபிஐ காவல் நீட்டிப்பு. இடைக்கால ஜாமீன் மனு இன்று விசாரிக்கப்படும் என டெல்லி சிபிஐ நீதிமன்றம் அறிவிப்பு.
சந்திரயான் 2 திட்டத்தில் ஆர்பிட்டரிலிருந்து லேண்டர் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டது. இன்று லேண்டரை நிலவுக்கு அருகே கொண்டு செல்லும் முதல்கட்ட பணிகள் தொடக்கம்.
சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது.
மேற்கிந்திய தீவுகளுடனான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 257 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி. அதிக டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்ற இந்தியக் கேப்டன் என்ற பெருமையை பெற்றார் விராத் கோலி.
உலகக் கோப்பை துப்பாக்கிச்சுடுதலில் இந்திய அணிக்கு ஒரே நாளில் இரண்டு தங்கப் பதக்கங்கள். பதக்கப்பட்டியலில் முதலிடத்தை பிடித்து சாதனை.