திருச்சி நகைக்கடை கொள்ளைக் கும்பலில் ஒருவர், திருவாரூரில் வாகன சோதனையின்போது கைது. கைதான மணிகண்டன் என்ற கொள்ளையனிடம் 5 கிலோ தங்க நகைகளும் பறிமுதல்.
வாகன சோதனையின் போது தப்பிச் சென்ற சுரேஷ் என்ற கொள்ளையனை பிடிக்க போலீஸ் தீவிரம். பிடிபட்ட மற்றொரு கொள்ளையனிடம் ரகசிய இடத்தில் விடியவிடிய விசாரணை.
தலைநகர் டெல்லி மற்றும் திருப்பதி கோயிலுக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் எனத் தகவல். இன்று கருட சேவை நடைபெறவுள்ள நிலையில் உச்சக்கட்ட பாதுகாப்பு.
ராதாபுரம் தேர்தல் வழக்கில் இன்று உயர்நீதிமன்றத்தில் மறுவாக்கு எண்ணிக்கை. தடைகோரிய அதிமுக எம்எல்ஏ இன்பதுரையின் மனுவை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்.
மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங்கை வரவேற்று பேனர் வைக்க தடையில்லை. மக்களுக்கு இடையூறு இருக்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.
விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு. வரும் 12-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை.
தமிழகத்தில் 5 அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை. கணக்கில் வராத ரூ.7.7 லட்சம் ரொக்கம் சிக்கியது.
திருச்சி நகைக்கடை கொள்ளையில் சிக்கிய மணிகண்டன் புகைப்படம் வெளியீடு. விசாரணையின்போது தரையில் மணிகண்டன் அமர்ந்திருக்கும் படம் வெளியீடு