நடிகர் ரஜினிக்கு சம்மன் முதல் பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணி வரை..! #TopNews

நடிகர் ரஜினிக்கு சம்மன் முதல் பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணி வரை..! #TopNews

நடிகர் ரஜினிக்கு சம்மன் முதல் பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணி வரை..! #TopNews
Published on

தஞ்சை பெரிய கோயிலில் கோலாகலமாக தொடங்கியது குடமுழுக்கு விழா நிகழ்வுகள். தமிழ், சமஸ்கிருதம் என இரு மொழிகளிலும் குடமுழுக்கு நடைமுறைகள்.

5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு ரத்து. பழைய நடைமுறையே தொடரும் என பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு.

டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேட்டில் ஆயுதப்படை காவலர் சித்தாண்டி உட்பட மேலும் 5 பேர் கைது. தலைமறைவாக உள்ள ஜெயக்குமார் உள்ளிட்ட 12 பேரின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களை பதவி நீக்கக்கோரும் வழக்கில் பதிலளிக்குமாறு பேரவைச் செயலருக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல். வழக்கு விசாரணை பிப்ரவரி 14-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த விவகாரம். நடிகர் ரஜினிகாந்த் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க அருணா ஜெகதீசன் ஆணையம் சம்மன்.

19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை தொடர். பாகிஸ்தானை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்திய அணி.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com