அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்புகள் முதல் வரலாறு படைத்த இந்திய அணி வரை..! #TopNews

அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்புகள் முதல் வரலாறு படைத்த இந்திய அணி வரை..! #TopNews

அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்புகள் முதல் வரலாறு படைத்த இந்திய அணி வரை..! #TopNews
Published on

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இல்லை என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி. பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து வந்த 12 பேர் மட்டும் மருத்துவமனையில் கண்காணிப்பில் இருப்பதாக விளக்கம்.

கேரளாவில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவிப்பு. சீனாவில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு இ விசா நிறுத்திவைப்பு

கொரோனா வைரஸால் சீனாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 350 ஆக அதிகரிப்பு. நோயாளிகளுக்காக 9 நாளில் கட்டிமுடிக்கப்பட்ட சிறப்பு மருத்துவமனை.

குரூப் 2ஏ தேர்வு முறைகேடு தொடர்பாக மேலும் மூவர் கைது. தலைமறைவாகவுள்ள காவலர் சித்தாண்டி மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு.

டெல்லி ஜாமியா பல்கலைக்கழகம் அருகே மீண்டும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக புகார். காவல் நிலையத்தை முற்றுகையிட்டு மாணவர்கள் போராட்டம்.

வருமான வரி நடைமுறைகளில் செய்யப்பட்ட மாற்றங்கள் குழப்பத்தை ஏற்படுத்துகின்றன. புதிய தலைமுறையின் அக்னி பரீட்சை நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கருத்து.

நியூசிலாந்துக்கு எதிரான கடைசி 20 ஓவர் போட்டியிலும் இந்தியா வெற்றி. ஒரு டி 20 கிரிக்கெட் தொடரில் அனைத்து 5 போட்டிகளிலும் வென்ற ஒரே அணி என்ற வரலாறு படைத்தது இந்தியா.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com