\
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு முதல் காணும் பொங்கல் கொண்டாட்டம் வரை #TopNews

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு முதல் காணும் பொங்கல் கொண்டாட்டம் வரை #TopNews

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு முதல் காணும் பொங்கல் கொண்டாட்டம் வரை #TopNews
Published on

தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பை செயல்படுத்துவது குறித்து டெல்லியில் இன்று ஆலோசனை. உள்துறை அமைச்சகம் சார்பில் நடைபெறும் கூட்டத்தில் பல்வேறு மாநிலங்களின் தலைமைச் செயலர்கள் பங்கேற்பு.

தமிழகம் முழுவதும் காணும் பொங்கலை கொண்டாடும் மக்கள். சென்னையில் மெரினா உள்ளிட்ட இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்.

உலகப் பிரசித்தி பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று நடைபெறுகிறது. போட்டியையொட்டி வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் உள்ளிட்டோர் குவிந்துள்ளனர்.

பாலமேடு ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகளைப் பிடிக்க போட்டி போட்ட வீரர்கள். 16 காளைகளை பிடித்து காரை பரிசாக வென்றார் பிரபாகரன்.

நிர்பயா குற்றவாளிகளுக்கு 22-ஆம் தேதி தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படுமா? உள்துறை அமைச்சகத்தின் பரிசீலனையில் கருணை மனு இருப்பதாக தகவல்.

ஆஸ்திரேலிய அணிக்கு பதிலடி கொடுக்குமா இந்திய அணி. வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் ராஜ்கோட்டில் இன்று பலப்பரீட்சை

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com