தமிழகத்தில் ஐஎஸ் ஆதரவாளர்கள் கைது முதல் அமெரிக்காவின் அறிவிப்பை நிராகரித்த இந்தியா வரை..! #TopNews
தஞ்சை பெரிய கோயிலில் தமிழில் குடமுழுக்கு நடத்த வலியுறுத்தி உரிமை மீட்புக் குழு மாநாடு. வழக்கு தொடர்பாக தமிழ்நாடு அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு.
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஐ.எஸ். ஆதரவாளர்கள் மூன்று பேர் கைது. தலைமறைவாக உள்ள மற்றொருவரைப் பிடிக்கத் தனிப்படை அமைப்பு.
சிறப்பு காவல் ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கில் கைதான இருவரையும் கேரளாவுக்கு கொண்டுசென்று விசாரணை. சுட்டுக்கொல்ல பயன்படுத்திய துப்பாக்கியை வீசி எறிந்த இடம் குறித்து காவல்துறையினரிடம் தகவல்.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மீண்டும் மறுப்பு. வழக்குகள் அனைத்தும் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்படுவதாக அறிவிப்பு.
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேச வளர்ச்சிக்கு பெருமளவில் நிதி. 80 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கியது மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை.
காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்காவின் தலையீட்டை மீண்டும் நிராகரித்தது இந்தியா. உதவத் தயார் என அதிபர் டொனால்டு ட்ரம்ப் விடுத்த அறிவிப்பு நிராகரிப்பு.