சிஏஏ மனுக்கள் மீது விசாரணை; ஆகம விதிப்படி குடமுழுக்கு; இன்னும் முக்கியச் செய்திகள் #TopNews
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட 143 மனுக்களை இன்று விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம். அரசு கொண்டு வந்த திருத்தம் அரசமைப்பு சாசனத்திற்கு உட்பட்டதா என ஆய்வு.
சேலம் தலைவாசலில் ஆயிரம் கோடி ரூபாயில் அமையும் கால்நடை பூங்காவுக்கு பிப்ரவரி 7-ல் அடிக்கல். ஆத்தூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.
பெரியார் குறித்து பேசிய கருத்திற்காக மன்னிப்போ, வருத்தமோ தெரிவிக்க முடியாது: நடிகர் ரஜினிகாந்த் திட்டவட்டம்.
பயிலும் பள்ளியிலேயே 5-ஆம் வகுப்பு மற்றும் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு: உரிய ஆணை பிறப்பிக்கப்படுமென அமைச்சர் செங்கோட்டையன் உறுதி.
சென்னையில் 13 நாட்கள் நடைபெற்ற புத்தகக் கண்காட்சி நிறைவு. கடந்தாண்டை விட இந்தாண்டு வாசகர்கள் வருகை 20% அதிகம்.
தஞ்சை பெரிய கோயிலில் ஆகம விதிப்படி குடமுழுக்கு நடத்தப்படும் என தமிழக அரசு நீதிமன்றத்தில் தகவல். விழாவை கண்காணிக்க குழு அமைத்தும் தமிழக அரசு உத்தரவு.