இன்றைய முக்கியச் செய்திகள்..!

இன்றைய முக்கியச் செய்திகள்..!

இன்றைய முக்கியச் செய்திகள்..!
Published on

தேசப்பிதா மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாள் நாடு முழுவதும் இன்று கொண்டாட்டம். இந்தியாவை திறந்த வெளி கழிப்பிடமற்ற நாடாக அறிவிக்கிறார் பிரதமர் மோடி.

பிரதமர் மோடி - சீன அதிபர் சந்திப்பு நடைபெறுவதால், மாமல்லபுரம் பாதுகாப்பு வளையத்தில் கொண்டுவரப்பட்டது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று நேரில் ஆய்வு செய்கிறார்.

சீன அதிபர் வருகையையொட்டி வரவேற்பு பதாகைகள் வைக்க அனுமதி வேண்டும். சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மனு.

ஆயுத பூஜைக்கும் சிறப்புப் பேருந்துகள் இயக்கம். சென்னையில் இருந்து 3 நாட்களுக்கு இயக்கப்படவுள்ளதாக அறிவிப்பு.

ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் இன்பதுரை வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு. தபால் வாக்குளை மீண்டும் எண்ண உயர்நீதிமன்றம் உத்தரவு.

சென்னையில் இரு சக்கர வாகனத்தில் சென்ற தொழிலதிபரிடம் பணம் பறிக்க முயன்ற கும்பல். தஞ்சம் புகுந்த கடையில் இருந்த பாதுகாவலர்கள் துப்பாக்கியை காட்டி மிரட்டியதால் கொள்ளையர்கள் தப்பி ஓடினர்.

வன்கொடுமை தடுப்புச்சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தால் புகாருக்கு ஆளானவரைக் கைது செய்யத் தடையில்லை. சமத்துவத்திற்கான போராட்டம் இன்னும் ஓயவில்லை என்றும், உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து.

தமிழை நாட்டின் ஆட்சி மொழியாக்கி பெருமைப்படுத்த பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல். சென்னை ஐஐடியில் தமிழ் குறித்து பேசியதைப் பாராட்டுவதாகவும் அறிக்கை.

இந்தியா - தென்னாப்ரிக்கா இடையில் முதல் கிரிக்கெட் டெஸ்ட் விசாகப்பட்டினத்தில் இன்று தொடக்கம். சொந்த மண்ணில் தொடர்ந்து 11-வது வெற்றியை சுவைக்கும் முனைப்பில் விராட் கோலி அணி.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com