இன்றைய முக்கியச் செய்திகள்..!

இன்றைய முக்கியச் செய்திகள்..!

இன்றைய முக்கியச் செய்திகள்..!
Published on

சீனா உள்ளிட்ட நாடுகளுடனான தடையற்ற வர்த்தக உடன்பாட்டில் சேர இந்தியா மறுப்பு. உள்நாட்டு நலனில் சமரசம் செய்து கொள்ள முடியாது என பிரதமர் மோடி திட்டவட்டம்.

வெங்காயத்தை அதிக விலைக்கு விற்றாலோ, பதுக்கி வைத்தாலோ நடவடிக்கை பாயும். வியாபாரிகளுக்கு தமிழக அரசு எச்சரிக்கை.

தஞ்சாவூர் அருகே திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்ட சம்பவம். விஷமச் செயலில் ஈடுபட்ட நபரை பிடிக்க 4 தனிப்படைகள் அமைப்பு.

திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்டதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம். திருவள்ளுவர் இந்து மதத்தைச் சேர்ந்தவர் என்று கூறுவது அவரவர் விருப்பம் என அமைச்சர் பாண்டியராஜன் கருத்து.

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திடீர் சந்திப்பு. முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தியிருப்பதாக தகவல்.

மக்கள் விலைமதிப்பற்ற வாழ்நாளை இழந்து வருவதாக டெல்லி காற்று மாசு குறித்து உச்ச நீதிமன்றம் அதிருப்தி. பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேச மாநில தலைமைச் செயலாளர்களுக்கு சம்மன் அனுப்பவும் உத்தரவு.

கூடங்குளம் அணுமின் நிலைய கணினியை ஹேக் செய்ய வடகொரியா முயன்றதாக அதிர்ச்சி தகவல். ஆதாரங்களுடன் ட்விட்டரில் அம்பலப்படுத்தியது தென் கொரியா.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com