இலங்கையுடன் 2-வது டி20 போட்டி முதல்.. தீவிரமாகும் ஈரான்- அமெரிக்கா மோதல் வரை..! #TopNews
ஜேஎன்யூவில் ABVP அமைப்பினர் தாக்குதல் நடத்தியதாக காயமடைந்த மாணவர் சங்கத்தினர் குற்றச்சாட்டு. எதிர்தரப்பினர் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் உறுதி.
ஜேஎன்யூ பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள். கொல்கத்தாவில் போராடிய மாணவர்கள் மீது தடியடி.
2017-18-ஆம் ஆண்டுக்கான குரூப் 2ஏ தேர்விலும் முறைகேடு நடந்திருக்கலாம் என தேர்வர்கள் சந்தேகம். ராமேஸ்வரம் மையத்தில் இருந்து மட்டும் முதல் 50 இடங்களுக்குள் 30 பேர் தேர்ச்சி.
சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரான சீராய்வு மனுக்கள். 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு வரும் 13-ஆம் தேதி முதல் விசாரணை
டெல்லி சட்டப்பேரவைக்கு பிப்ரவரி 8-ஆம் தேதி தேர்தல் நடைபெறுமென தேர்தல் ஆணையம் அறிவிப்பு. அர்விந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை தக்கவைக்கும் என சிவோட்டர் கருத்துகணிப்பில் தகவல்.
ஒன்றிய தலைவர்களை தேர்வு செய்ய கவுன்சிலர்களின் ஆதரவைப் பெற அதிமுக, திமுக இடையே கடும் போட்டி. மறைமுகத் தேர்தலுக்கு முழு பாதுகாப்பு வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர்கள் உறுதி.
ஈரானுக்கு ஒருபோதும் அணு ஆயுதங்கள் கிடைக்காது என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீண்டும் திட்டவட்டம். ஈரானை மிரட்டவேண்டாம் என அந்நாட்டு அதிபர் எச்சரிக்கை.
இந்தூரில் இன்று இந்தியா இலங்கை இடையேயான 2-வது டி20 போட்டி. முதல் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில் வெற்றி பெற இரு அணிகளும் முனைப்பு.