மதியநேர முக்கியச் செய்திகள் !

மதியநேர முக்கியச் செய்திகள் !

மதியநேர முக்கியச் செய்திகள் !
Published on

அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடியுடன் ட்ரம்ப் பங்கேற்பு.

தமிழகத்தில் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்களுக்கு 100 சதவிகித‌ வரிவிலக்கு. புதிய மின்சார வாகனக் கொள்கையில் தமிழக அரசு அறிவிப்பு.

பள்ளிகளின் காலாண்டு விடுமுறையில் மாற்றம் இல்லை. செப்.23 முதல் அக்.2 வரை காந்திய சிந்தனை சார்ந்த நிகழ்ச்சி நடத்த சுற்றறிக்கை வெளியான நிலையில் பள்ளிக்கல்வித் துறை விளக்கம்.

நன்றி மறந்தவன் தமிழன். முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனின் பேச்சால் சர்ச்சை

அனுமதியின்றி பேனர் வைக்கமாட்டோம். சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக பிரமாணப் பத்திரம்.

சிவகங்கை மாவட்டத்தில் ஜீவசமாதி அடைவதாக‌ கூறியவரின் மகன் மீது வழக்குப்பதிவு. மக்களை ஏமாற்றி உண்டியல் வசூல் செய்ததாக வழக்கு.

அயோத்தி வழக்கின் விசாரணையை நேரலை செய்ய தலைமை நீதிபதி அமர்வு ஒப்புதல்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com