\
கிராம சபைக் கூட்டங்கள்
கிராம சபைக் கூட்டங்கள்முகநூல்

தமிழ்நாடு முழுவதும் இன்று நடக்கின்றன கிராம சபைக் கூட்டங்கள்... என்னவெல்லாம் விவாதிக்கப்படும்?

இன்று அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டத்தை நடத்த தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்துள்ளது.
Published on: 

தமிழ்நாடு முழுவதும் இன்று கிராம சபைக் கூட்டங்களை நடத்த, அரசு ஏற்பாடு செய்ள்ளது. கடந்த ஒன்றாம் தேதி, உள்ளாட்சி தினத்தையொட்டி கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்பட இருந்தன.

ஆனால், நிர்வாகக் காரணங்களால், ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து, இன்று அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டத்தை நடத்த தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்துள்ளது. இந்தக் கூட்டங்களில், வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

கிராம சபைக் கூட்டங்கள்
தொடர் அதிருப்தி.. கட்சியில் இருந்து வெளியேறும் நிர்வாகிகள்! நாதகவில் நடப்பது என்ன?

மேலும், ஊராட்சிகளில் சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களை சிறப்பித்தல், மகளிர் சுய உதவிக் குழுக்களை கவுரவித்தல், துாய்மை பாரத இயக்க ஊரகத் திட்டம், நூறுநாள் வேலைத் திட்டம், ஜல் ஜீவன் திட்டம், தீன்தயாள் கிராமப்புற திறன் மேம்பாட்டு திட்டம் உள்ளிட்டவை குறித்தும் விவாதிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com