இதுக்கு ஒரு முடிவே இல்லையா!! மீண்டும் புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை!
தங்கத்தின் விலை இன்று மீண்டும் உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
அமெரிக்கப் பங்குச்சந்தை மோசமான சரிவை எதிர்கொண்டு வரும் நிலையில், பெரும் பகுதி முதலீடுகள் தற்போது தங்கம் மீது திரும்பியுள்ளது. இதன் காரணமாக தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்துள்ளது. இதுவும் தங்கம் விலை உயர்விற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.
இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து தங்கம் விலை தொடர்ந்து ஏற்றம் கண்டு வருவதால் கடும் சிரமத்துக்கு உள்ளாகி இருக்கிறார்கள். மேலும், பிப்ரவரி 1 முதல் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. இதில், தங்கத்தின் மீதான வரி அதிகரிக்க வாய்ப்பு இருக்குமா என்று கேள்வியும் எழும்பியுள்ளது.
இந்தவகையில், தொடர் உயர்வில் இன்றைய நிலவரப்படி (ஜனவரி 30 ஆம் தேதி காலை) சென்னையில், தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ. 120 உயர்ந்து ரூ. 60,880 ஆக விற்பனை ஆகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 15 உயர்ந்து ரூ.7,610 ஆக விற்பனையாகிறது.
அதேபோல், 18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 10 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 6,285க்கும், ஒரு சவரன் ரூ.80 உயர்ந்து ரூ.50,280க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேநேரம், கடந்த சில நாட்களாக, மாற்றம் ஏதும் இல்லாமல் இருந்த வெள்ளி விலை இன்று சற்று உயர்ந்தது. ஒரு கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ரூ.106க்கு விற்பனையாகிறது. இந்தவகையில், தற்போது ரூ. 61,000-ஐ நெருங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.