11 ஆண்டுகளுக்கு பின் காவிரி விவகாரத்தில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம்

11 ஆண்டுகளுக்கு பின் காவிரி விவகாரத்தில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம்

11 ஆண்டுகளுக்கு பின் காவிரி விவகாரத்தில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம்
Published on

உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து, காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி ஆலோசிக்க இன்று முதலமைச்சர் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. 11 ஆண்டுகளுக்குப்பிறகு காவிரி பிரச்னைக்காக இந்த அனைத்துக் கட்சி கூட்டம் கூடுவது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கில் அண்மையில் இறுதித்தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம் தமிழகத்திற்கான பங்கை குறைத்து பெங்களுரு குடிநீர் தேவைக்காக அதனை வழங்கியது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், காவிரி விவகாரம் தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க முத‌மைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. காலை 10.30 மணியளவில் இந்த கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த அனைத்து கட்சி கூட்டத்தை முன்னிட்டு தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சட்ட ஆலோசனை நடைபெற்றது. கடந்த 19-ஆம் தேதி ஏற்கனவே சட்ட ஆலோசனை நடைபெற்ற நிலையில், நேற்று 2-ஆவது முறையாக சட்ட ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சட்ட அமைச்சர் சிவி சண்முகம், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், தலைமை வழக்கறிஞர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்யும் பட்சத்தில் அதனை எதிர்கொள்வது பற்றி ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com