தமிழ்நாடு
கொரோனா : சென்னையில் இன்று மட்டும் 3 பேர் உயிரிழப்பு
கொரோனா : சென்னையில் இன்று மட்டும் 3 பேர் உயிரிழப்பு
(கோப்பு புகைப்படம்)
சென்னையில் இன்று மட்டும் கொரோனாவுக்கு 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அந்தவகையில் தமிழகத்தில் 28,694 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 232 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். மேலும், 15,762 பேர் இதுவரை சிகிச்சைப்பெற்று குணமடைந்துள்ளனர். சென்னையில் மட்டும் 19,826 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
(கோப்பு புகைப்படம்)
இந்நிலையில், சென்னை ஆயிரம் விளக்கு தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த வண்ணாரப்பேட்டையை சேர்ந்த 50 வயது ஆண் உயிரிழந்தார். இதேபோல் கோடம்பாக்கம் தனியார் மருத்துவமனையில் 87 வயது முதியவர் கொரோனாவால் உயிரிழந்தார். நுங்கம்பாக்கத்தை சேர்ந்த 77 வயது முதியவர் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.