கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்திலிருந்து எந்தெந்த ஊர்களுக்கு பேருந்துகள்செல்லும்?

சென்னை வண்டலூரை அடுத்துள்ள கிளாம்பாக்கத்தில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்திலிருந்து எந்தெந்த பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன? பொங்கல் வரை கோயம்பேடு பகுதியிலிருந்து எந்தெந்த ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன? என்பதை பார்க்கலாம்.
கிளாம்பாக்கம்
கிளாம்பாக்கம்புதிய தலைமுறை

செய்தியாளர்: ராஜ்குமார்

சென்னை வண்டலூரை அடுத்துள்ள கிளாம்பாக்கத்தில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்திலிருந்து எந்தெந்த பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன? பொங்கல் வரை கோயம்பேடு பகுதியிலிருந்து எந்தெந்த ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன? என்பதை பார்க்கலாம்.

SETC எனப்படும் அரசு விரைவுப் போக்குவரத்துக்கழக பேருந்துகள் அனைத்தும் இனி கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்துதான் புறப்படும். அதேபோன்று, கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரையே இயக்கப்படும். அதன்படி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய தென் மாவட்டங்களைச் சேர்ந்த விரைவுப் பேருந்துகள் கிளாம்பாக்கத்திலிருந்தே புறப்படும். திருச்சி, மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை ஆகிய பகுதிகளுக்கான விரைவு பேருந்துகள் இனி கோயம்பேடு செல்லாது.

தஞ்சை, திருவாரூர், கும்பகோணம், வேளாங்கண்ணி ஆகிய டெல்டா பகுதிகள், தருமபுரி, ஒசூர் ஆகிய இடங்களுக்கான விரைவு பேருந்துகள் கிளாம்பாக்கத்திலிருந்தே புறப்படும். மேற்கு மாவட்டங்களான சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, திருப்பூர், கோவை ஆகிய ஊர்களுக்கும் கொடைக்கானல், எர்ணாகுளம், திருப்பதி ஆகிய இடங்களுக்கும் கிளாம்பாக்கத்திலிருந்துதான் விரைவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. TNSTC எனப்படும் 6 போக்குவரத்துக் கழகங்களின் பேருந்துகள் பொங்கல் பண்டிகை வரை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி காஞ்சிபுரம், ஆரணி, ஆற்காடு, செய்யாறு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, ஒசூர், சேலம், திருப்பதி, நெல்லூர் ஆகிய ஊர்களுக்கான TNSTC பேருந்துகள் கோயம்பேட்டிலிருந்து புறப்படும். திண்டிவனம், செஞ்சி, வந்தவாசி, திருவண்ணாமலை, போளூர், சேத்பட் ஆகிய ஊர்களுக்கும் விழுப்புரம், கடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோயில், நெய்வேலி, கள்ளக்குறிச்சி ஆகிய இடங்களுக்கும் பொங்கல் வரை கோயம்பேட்டிலிருந்துதான் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

கிளாம்பாக்கம்
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர்

இசிஆர் வழியாக பண்ருட்டி, வடலூர், தஞ்சை, கும்பகோணம் ஆகிய ஊர்களுக்கு செல்லும்பேருந்துகள் கோயம்பேட்டிலிருந்து இயக்கப்படும். அதேநேரத்தில் பெங்களூருவுக்கு செல்லும் SETC பேருந்துகள், ECR வழியாக புதுச்சேரி, நாகை ஆகிய ஊர்களுக்கு செல்லும் SETC பேருந்துகள் கோயம்பேட்டிலிருந்து இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆம்னி பேருந்துகளை பொருத்தவரை பொங்கல் வரை கோயம்பேட்டிலிருந்து இயக்கிக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. அதன்பின் கிளாம்பாக்கத்திலிருந்து மட்டுமே இயக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com