சடங்கு என்ற பெயரில் பெண்களை துன்புறுத்துவதா ? சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்

சடங்கு என்ற பெயரில் பெண்களை துன்புறுத்துவதா ? சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்

சடங்கு என்ற பெயரில் பெண்களை துன்புறுத்துவதா ? சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்
Published on

சடங்கு என்ற பெயரில் பெண்களை துன்புறுத்துவதை சகித்துக் கொள்ள முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது

தர்மபுரியை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 2001 ஆம் ஆண்டு தனது நாத்தனார்கள் மீது தர்மபுரி அனைத்து காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார். அந்தப் புகாரில்  பேய் பிடித்துள்ளதாகக் கூறி எனது நாத்தனார்கள் நள்ளிரவில் தொப்பூர் அணைக்கு என்னை அழைத்து சென்றனர். அங்கு எனது ஆடைகளை களைந்து மொட்டை அடித்து, நாக்கில் சூடு வைத்தனர். இதனையடுத்து எனது தாலியை கழற்றி விட்டு மீண்டும் கணவனை கொண்டு கட்டச் செய்தனர் என அதில் தெரிவித்தார். பெண்ணின் புகாரை ஏற்ற காவல்துறையினர் அவரது நாத்தனார்களை கைது செய்தனர்.  இந்த வழக்கை விசாரித்த தர்மபுரி மாவட்ட நீதிமன்றம் அந்தப்பெண்களுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.


இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கின் தீர்ப்பில், சம்பவம் நடந்து 17 ஆண்டுகளாவதாலும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் பெண்களாக இருப்பதாலும், ஏற்கெனவே அவர்கள் அனுபவித்த தண்டனையே போதுமானது. நான்கு நாத்தனார்களுக்கும் தலா 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். இந்தத்தொகையை பாதிக்கப்பட்ட பெண்ணிடம் வழங்க வேண்டும் என தெரிவித்தார்.மேலும் சடங்கு என்ற பெயரில் பெண்களை துன்புறுத்துவதை சகித்துக் கொள்ள முடியாது என்றும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனைகள் விதிக்கப்பட வேண்டும் என்று தனது கண்டனத்தை பதிவு செய்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com