ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வனவி‌லங்குகளை கணக்கெடுக்கும் பணி தொடக்கம்

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வனவி‌லங்குகளை கணக்கெடுக்கும் பணி தொடக்கம்

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வனவி‌லங்குகளை கணக்கெடுக்கும் பணி தொடக்கம்
Published on

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வனவி‌லங்குகளை கணக்கெடுக்கும் பணி இன்று தொடங்கியது.

வனவி‌லங்குகளை கணக்கெடுக்கும் பணியில் 6 வன சரகங்களில் உள்ள 106 நேர்கோட்டு பாதையில், 318 வன ஊழியர்கள் மற்றும் தன்னார்வளர்கள் ஈடுபட்டுள்ளனர். இன்று பொள்ளாச்சி வனசரகத்திற்கு உட்பட்ட பூங்கன் ஒடை, போத்தமடை வனப் பகுதியில் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படுகிறது.

முதல் 3 நாட்களுக்கு புலி, சிறுத்தை உள்ளிட்டவைகளும், அடுத்த மூன்று நாட்களுக்கு மான், காட்டெருமை போன்றவைகளும், கடைசி மூன்று நாட்களில் தாவரங்களை கணக்கெடுக்கும் பணியும் நடைபெறுகிறது. இந்தமுறை மொபைல் போனில் புதிய செயலி உருவாக்கப்பட்டு கணக்கெடுப்பு பணியில் பயன்படுத்துவது சுலபமாக இருப்பதாக தன்னார்வலர்கள் தெரிவித்தனர்.

‌ 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com