\
தீபாவளி முன்பதிவு.. அரசுக்கு ரூ.6.84 கோடி வருவாய்..!

தீபாவளி முன்பதிவு.. அரசுக்கு ரூ.6.84 கோடி வருவாய்..!

தீபாவளி முன்பதிவு.. அரசுக்கு ரூ.6.84 கோடி வருவாய்..!
Published on

தீபாவளி பண்டிக்கைக்காக சொந்த ஊர் சென்று வருவதற்கான முன்பதிவு மூலம் தமிழக போக்குவரத்து துறைக்கு 6 கோடியே 84 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.

தமிழகம் முழுவதும் பல்வேறு ஊர்களில் உள்ளவர்கள் தீபாவளி பண்டிகையையொட்டி தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். சொந்த ஊர்களுக்கு செல்லவும், பண்டிகை முடிந்து திரும்புவதற்கும் தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படும் பேருந்துகளில் முன்பதிவு செய்து வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் கடந்த 3-ஆம் தேதி தேதியிலிருந்து 5 வரை சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 807 பேர் முன் பதிவு செய்துள்ளனர். சென்னையிலிருந்து புறப்படுவதற்காக மட்டும் 81,730 பேர் முன்பதிவு செய்துள்ளனர். தமிழ்நாடு போக்குவரத்து துறை சார்பில் இந்த தக‌வல் வெளியாகியுள்ளது. இதேபோல்,7 ஆம் தேதியிலிருந்து வெளியூர்களிலிருந்து சென்னைக்கு வர 55,000 பேர் வரை தீபாவளி சிறப்பு பேருந்துகளில் முன்பதிவு செய்ததாக தகவல் தெரிவிக்கின்றன. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com