\
தீபாவளிக்கு 16,540 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் - போக்குவரத்துத் துறை அறிவிப்பு

தீபாவளிக்கு 16,540 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் - போக்குவரத்துத் துறை அறிவிப்பு

தீபாவளிக்கு 16,540 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் - போக்குவரத்துத் துறை அறிவிப்பு
Published on

தீபாவளிக்கு சொந்த ஊர் செல்பவர்கள் நலன் கருதி 16,540 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்திருக்கிறது.

ஆண்டுதோறும் தீபாவளி மற்றும் பண்டிகை நாட்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி சென்னை மற்றும் பிற ஊர்களிலிருந்து 16,540 சிறப்பு பேருந்துகள் நவம்பர் ஒன்றாம் தேதிமுதல் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அறிவித்திருக்கிறது. தீபாவளி பண்டிகை முடிந்து மக்கள் மீண்டும் சென்னை திரும்ப 17,719 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆயுத பூஜையை முன்னிட்டு 800 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படவுள்ளதாக தெரிவித்திருக்கிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com