காத்திருந்த போட்டித் தேர்வர்களுக்கு கிடைத்த Good News... அட்டவணையை வெளியிட்டது TNPSC

2024-25 ஆம் ஆண்டுக்கான போட்டித் தேர்வு அட்டவணையை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்கோப்புப்படம்

நடப்பாண்டில் அறிவிக்கப்படாமல் உள்ள குரூப் 1, குரூப் 4 காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு தொடர்பான அறிவிப்பு எப்போது வெளியாகும் என தேர்வுக்கு தயாராகி வருபவர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ள சூழலில், நேற்று மாலை டி.என்.பி.எஸ்.சி அதுகுறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

TNPSC Annual planner
TNPSC Annual planner

அதன்படி, குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு 2024 ஆம் ஆண்டு ஜனவரியில் வெளியிடப்பட்டு ஜூன் மாதம் தேர்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வுக்கான அறிவிப்பு மே மாதம் வெளியிடப்பட்டு ஆகஸ்ட் மாதம் தேர்வு நடத்தப்படும் என டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதே சமயம் குரூப் 1 தேர்வுக்கான அறிவிக்கை அடுத்தாண்டு மார்ச் மாதம் வெளியிடப்பட்டு, ஜூலையில் தேர்வு நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்து.

இதே போன்று பல்வேறு அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான தேர்வு தொடர்பான அறிவிப்பையும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com